தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்
x

தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சிவன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ராஜன் வாழ்த்தி பேசினார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொது மேலாளர் ரமேஷ், மனிதவள மேம்பாட்டு துறை இணை மேலாளர் சபரிகணேஷ், இளங்கோ ஆகியோர் வங்கி வேலைவாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ஹரிபிரகாஷ் நன்றி கூறினார். முகாமில் அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன், பேராசிரியர்கள் முருகவேல், ஜெகதா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story