தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டம்
கடையநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் யாகூப் தலைமையில் நடைபெற்றது. த.மு.மு.க. மாவட்டச் செயலாளர் முகமது பாசித், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி, பொருளாளர் அப்துல் காதர், மாவட்ட துணைத்தலைவர் அப்துல் ரஹ்மான், மாவட்ட செயலாளர்கள் மஜீத், ஷேக், உமர் கத்தாப், அபுதாஹிர், ஷாஜகான், செய்யது அலி, திவான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு அழைப்பாளராக, மாநிலச்செயலாளர் மைதீன் சேட்கான் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி திருவை செய்யது ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர். கடையநல்லூர் நகர தலைவர் முகமது பஸ்லி நன்றி கூறினார்.
கூட்டத்தில் கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரி அருகில் மாவட்ட சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், செங்கோட்டையில் இருந்து மும்பைக்கு வாராந்திர ரெயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.