தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து நாகை அவுரித்திடலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், அந்த இடத்தில் வழிபாட்டு உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் பெண்கள் உளபட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story