தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு 'ஏ பிளஸ்' அங்கீகாரம் - தேசிய தர நிர்ணய கழகம் வழங்கியது


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு ஏ பிளஸ் அங்கீகாரம் - தேசிய தர நிர்ணய கழகம் வழங்கியது
x

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர நிர்ணய கழகம் ‘ஏ பிளஸ்’ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

சென்னை,

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய தர நிர்ணய கழகம், நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை நேரில் ஆய்வு செய்து அங்குள்ள வசதிகளுக்கு ஏற்ப தர நிர்ணய சான்றிதழ்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தேசிய தர நிர்ணய கழகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த தேசிய தர நிர்ணய கழகம், தற்போது அந்த பல்கலைக்கழகத்திற்கு 'ஏ பிளஸ்' என்ற உயர்ந்தபட்ச அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளில் தேசிய தர நிர்ணய கழகத்திடம் இருந்து 'ஏ பிளஸ்' அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் ஆன்லைன் வாயிலாக பாடத்திட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும் என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story