அதிக வருமான வரி செலுத்தியவர்; ரஜினிக்கு விருது


அதிக வருமான வரி செலுத்தியவர்; ரஜினிக்கு விருது
x
தினத்தந்தி 24 July 2022 1:05 PM IST (Updated: 24 July 2022 1:22 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு - புதுச்சேரி மண்டலத்தில் அதிகமாக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டது

சென்னை,

சென்னை ஆழ்வார்ப்பேட்டை மியூசிக் அகாடமியில் வருமான வரி தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு - புதுச்சேரி மண்டலத்தில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு விருது வழங்க்ப்பட்டது.

இந்த விருதை வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார். ரஜினிகாந்துக்கு பதில் அவரது மகள் சௌந்தர்யா விருதை பெற்றுக் கொண்டார்.





Next Story