ரூ.5 கோடியில் தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்
கோவையில் ரூ.5 கோடியில் தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கோவை
கோவையில் ரூ.5 கோடியில் தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்
கோவை விமான நிலையம் அருகே ரூ.5 கோடியில் தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது.
சொலவம்பாளையத்தில் 42.42 ஏக்கரில் ரூ.18.13 கோடியில் கொசிமா புதிய தனியார் தொழிற்பேட்டை, குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.22 கோடியில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் 510 தொழிலாளர்கள் தங்கும் விடுதி ஆகிய திட்டங்களுக்கு திருப்பூரில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதையொட்டி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழக கயிறு வாரிய தலைவர் நாகராஜன், சிட்கோ தொழில்நுட்ப வல்லுனர் பாண்டியராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உற்பத்தியை பெருக்கும் திட்டம்
இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென் னை பயிரிடப்படுகிறது. தற்போது தொடங்கப்பட்டு உள்ள இந்த கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் மூலம் தென்னை பயிரிடும் பரப்பு 1 லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகமாகி தென்னை உற்பத்தி யை பெருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் அரிய திட்டம் ஆகும்.
இந்த திட்டம் தென்னை விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்தது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து பின்னர் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 5 மாதங்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.