தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகள், பணி உரிமைகள், கணினி உதவியாளர்களுக்கு பணி ஆணை, வட்டார ஒருங்கிணைப்பாளருக்கு ஊதிய உயர்வு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் வட்டார திட்ட அலுவலர் பணியிடம் ஆகியவை வழங்க வேண்டும். அரசாணைகள் 17, 62 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ேகாஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story