தியாகதுருகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட துணை தலைவர் தயாபரன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், வட்டார நிர்வாகிகள் அன்னாதுரை, கருணாகரன், அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் வீரமணி வரவேற்றார். ஆர்ப்பாட்டமானது, விருதுநகர் மாவட்டம் நாிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய பொறியாளராக பணியாற்றி வந்த பெரோஸ்கான் என்பவரை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை மீண்டும் பணி அமா்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நடைபெற்றது.
இதி்ல் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு, ஒன்றிய பொறியாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் அண்ணாமலை, இனியன், குப்புசாமி, வைத்திநாதன், பழனிமுத்து, சங்கீதா, செல்வி, பொற்ச்செல்வி, சண்முகம், ராமலிங்கம், கனீஷ்பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார துணை தலைவர் ஜெகதீசன் நன்றி கூறினார்.