தமிழகத்தை வன்கொடுமைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கவேண்டும் -தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


தமிழகத்தை வன்கொடுமைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கவேண்டும் -தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
x

தமிழகத்தை வன்கொடுமைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கவேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021-ம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக 2019-ம் ஆண்டில் 1,144 குற்றங்கள் நடந்திருந்தன. 2020-ம் ஆண்டில் 1,274 வன்கொடுமை குற்றங்கள் நிகழ்ந்தன. 2021-ல் தலித் மக்கள் மீதான வன்கொடுமைக் குற்றங்களின் எண்ணிக்கை 1,377 ஆக உயர்ந்திருக்கிறது. காவல்துறையின் மெத்தனமான போக்கே வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு காரணம் என்பதை தேசிய குற்ற ஆவண அறிக்கை புலப்படுத்துகிறது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு சாதிய வன்கொடுமைகள் நடந்தன. தி.மு.க. ஆட்சியில் அந்த நிலை நீடிக்கக்கூடாது. முதல்-அமைச்சர் உறுதியோடு அதைத் தடுத்து நிறுத்தவேண்டும். இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தில்கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளே இல்லாத மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாட்டுக்கு உருவாக்கிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story