வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடம்


வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலத்தில் ஆன்ைலன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கோவையில் நடந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசினார்.

கோயம்புத்தூர்

கொரோனா காலத்தில் ஆன்ைலன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கோவையில் நடந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசினார்.

புதிய கோர்ட்டுகள் திறப்பு

வணிக வழக்குகளை விசாரிக்க கோவை காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி சமூகநலக்கூடத்தில் கமர்சியல் கோா்ட்டு அமைக்கப் பட்டு உள்ளது.

இதேபோல் கோவை மாவட்டம் அன்னூரில் மாவட்ட முனிசிப் மற்றும் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய கோர்ட்டுகளின் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.

புதிய கோர்ட்டுகளை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

கமர்சியல் கோர்ட்டில் ஆன்லைன் மூலம் நடந்த வழக்கு விசாரணைகளை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள தமிழ்நாடு நீதித்துறை பயிலரங்க அகாடமியில் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் வரவேற்றார்.

இதில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

புரட்சிகரமான சட்டம்

கடந்த 2015-ம் ஆண்டில் கொண்டு வந்த வணிக வழக்குகள் சட்டம் புரட்சிகரமான சட்டம். வணிக வழக்குகள் சட்டத்தில் உள்ள 23 பிரிவுகள் நாட்டின் பொருளாதாரத்தை துடிப்பானதாக ஆக்கவே கொண்டு வரப்பட்டன.

புதிய கமர்சியல் கோா்ட்டில் 6 மாதங்களுக்குள் வழக்குகளுக்கு தீர்வுக்காண முடியும்.

இந்த கோர்ட்டு நடைமுறை விரைவில் மற்ற வழக்குகளை விசாரிக்கும் சிவில் நீதிமன்றங்களில் பின்பற்றப்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

வணிக வழக்குகள் முதலில் சமரச முறையில் எடுத்துக் கொள்ளப் பட்டு, அங்கு தீர்வுக்காணப்படாத பட்சத்திலேயே கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

பணத்தை இழந்தவர் களுக்கு எளிதாக சிக்கலை தீர்க்க வழிவகை ஏற்படுத்தி தரக் கூடியது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வணிக நீதிமன்றங்கள் உதவும். இந்திய சட்டத்துறை விரைவில் அனைவராலும் பாராட்டப்படக் கூடியதாக இருக்கும்.

தமிழகம் முதலிடம்

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 2 ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் 63 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட் டது. இதில் தமிழகத்தில் 14 லட்சம் வழக்குகளுக்க தீர்வு காணப் பட்டன. அதாவது 21 சதவீத வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டதால் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்தது.

கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் இல்லாத நிலையை கொண்டு வந்தோம். தற்போது 2 முதல் 3 ஆண்டுகள் பதிவான வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

வணிக வழக்குகள்

விழாவில் வணிக வழக்குகள் கோர்ட்டு மறுசீரமைப்பு குழுவின் தலைவரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான சுந்தர் பேசும் போது, வணிக வழக்குகள் சட்டத்தில் இசைவு தீர்ப்பு முறை, சமரசம் ஆகிய 2 வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

இதனால் இந்த சட்டம் இயற்றிய பிறகு வணிக வழக்குகளை கையாளுவதில் உலக அளவில் இந்தியா 158-வது இடத்தில் இருந்து வேகமாக முன்னேறி 10 நாடுகளுக்குள் வந்து உள்ளது என்றார்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆதிகேசவலு, முரளி சங்கர், பரதசக்கரவர்த்தி, கோவை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் கலைய ரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் சுந்தரம் நன்றி கூறினார்.


Next Story