மத்திய அரசின் பணிகளில் தமிழர்கள் குறைவு: போட்டி தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராக வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


மத்திய அரசின் பணிகளில் தமிழர்கள் குறைவு: போட்டி தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராக வேண்டும்  - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 18 Jan 2023 3:57 PM IST (Updated: 18 Jan 2023 4:07 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் பணிகளில் தமிழர்கள் குறைந்த அளவிலேயே சேர்கின்றனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடக்கி வைத்தார்.

விழாவில் சிறப்புரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர், இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று உயரிய நிலையை அடைகின்ற நோக்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு எடுக்கப்பட்டுள்ளது.

மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் தொடங்க நடவடிக்கை முதலாவதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் இந்தப் பயிற்சி மையம் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களுக்கும். அலுவலர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் ஆர்வம் காட்டும் அளவுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்புகளுக்கான யூ.பி.எஸ்.சி. போன்ற போட்டித் தேர்வுகளில் அக்கறை காட்டுவதில்லை. மத்திய அரசு பணிகளில் 2.1 சதவீதம் நபர்கள் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகின்றனர்.

இரயில்வே மற்றும் வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்வதற்கு ஏதுவாக போட்டித் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இந்த மாநிலக் கல்லூரியில் சுமார் ரூ.64 கோடி மதிப்பீட்டில் 2000 நபர்கள் அமரக்கூடிய அளவிலான கலையரங்கம் கட்டப்பட உள்ளது. இந்தக் கல்லூரியில் சிற்றுண்டி உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகளை நானே தொடங்கி வைப்பேன்.

மாணவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இதுபோன்ற போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


Related Tags :
Next Story