முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி
x

அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க.அருள்சங்கு, பொதுச் செயலாளர் வெ.சரவணன், பொருளாளர் த.ராமஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படையை 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக ஜூலை 1-ந் தேதி முன் தேதியிட்டு மத்திய அரசு வழங்கியது.

இதையடுத்து தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்பட பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கடுமையான நிதி நெருக்கடியிலும் மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தும் அரும்பணியில் அரசோடு இணைந்து செயல்படுகின்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வு ஊதியதாரர்கள் என 16 லட்சம் பேர் பயன்படும் வகையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1-ந் தேதி முதல் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அகவிலைப்படியை முன் தேதியிட்டு உயர்த்தி உள்ளார். அவருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story