Normal
தமிழக அணி சாம்பியன்
வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது
கோயம்புத்தூர்
கோவை
தென்னிந்திய அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டி கோவை பி.எஸ்.ஜி. டெக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இறுதி போட்டியில் தெலுங்கானா அணியும், தமிழக அணியும் மோதின. வீரர்கள் வீல் சேரில் அமர்ந்து கொண்டு விளையாடினர்.
முடிவில் தமிழக அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
பெண்களுக்கான இறுதி போட்டியில் கர்நாடகா அணியும், தமிழக அணியும் மோதின. இதில் கர்நாடகா அணி 20-10 என்ற புள்ளிக்கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கலெக்டர் சமீரன் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
Next Story