தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக புதிய கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக புதிய கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ.189½ கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் சென்னை மாதவரத்தில் தேசிய கால்நடை குறிக்கோள் பணித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கால்நடை இறைச்சி உடல் அங்கப் பயன்பாட்டு ஆலை உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.189½ கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.47.50 கோடி செலவில் 3 ஆண்டுகளில் 7.2 லட்சம் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகள் உற்பத்தி செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து உற்பத்தி நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.

இந்த நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகளை கொண்டு, பசுக்களுக்கு கருவூட்டல் செய்வதன் மூலம் அதிக எண்ணிகைகள் கிடேரி கன்றுகள் பிறப்பதோடு, அதிக அளவில் கறவை பசுக்களை பால் உற்பத்திக்கு கொண்டு வந்து பால்உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள உறைவிந்து குச்சி உற்பத்தி நிலையங்களில் இருந்து கருவூட்டல் பணி நடைபெறும் கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு உறைவிந்து குச்சிகள் மற்றும் திரவ நைட்ரஜன் வினியோகம் செய்திட ஏதுவாக செங்கல்பட்டு, விருதுநகர், சேலம், தஞ்சை, ஈரோடு, சிவகங்கை, மதுரை, திருச்சி, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, விழுப்புரம், தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு வாகனம் வீதம் 16 வாகனங்களை வழங்கிடும் விதமாக 3 டிரைவர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

மீன்வளர்ப்பு அலுவலகம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் சென்னை மாதவரத்தில் கட்டப்பட்டுள்ள மீன்வள தொழில்சார் தொழிற்கல்வி நிலைய கட்டிடம் உள்பட மொத்தம் ரூ.11.66 கோடி செலவிலான தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


Next Story