தமிழக தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம், பாதுகாப்பு அளிக்கப்படும்; திருச்சியில் மலேசிய மந்திரி சரவணன் பேட்டி


தமிழக தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம், பாதுகாப்பு அளிக்கப்படும்; திருச்சியில் மலேசிய மந்திரி சரவணன் பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2022 1:44 AM IST (Updated: 24 Jun 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழக தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம், பாதுகாப்பு அளிக்கப்படும் என்று திருச்சியில் மலேசிய மந்திரி சரவணன் கூறினார்.

திருச்சி

மலேசிய நாட்டு மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி சரவணன் நேற்று விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்த அவர், மாலையில் ராமேசுவரத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி, ராமேசுவரம், கோவை போன்ற நகரங்களில் உள்ள இலக்கியம் சார்ந்த அமைப்புகள் எங்களை அழைத்துள்ளனர். இந்த பயணத்தை பொறுத்தவரை மலேசியாவிற்கும், தமிழகத்திற்கும் உள்ள இலக்கிய உறவை வலுப்படுத்துவதே ஆகும். மலேசியாவில் 6 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிப் படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை எடுத்து வருகிறது. உணவகங்கள் மற்றும் தொழிலாளர் துறை உள்ளிட்ட துறைகளில் தற்போது வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story