நூலகத்தில் தமிழ் வாசிப்பு பயிற்சி
நூலகத்தில் தமிழ் வாசிப்பு பயிற்சி நடந்தது.
இனாம் கரூர் கிளை நூலகத்தில் தமிழ் வாசிப்பு மற்றும் தமிழ் நாப்பழக்க பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர் ராஜலட்சுமி வரவேற்றார். தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ் கல்வித்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் கார்த்திக் இல்லம் தேடி கல்வி மையம் மாணவர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ் வாசிப்பு மற்றும் தமிழ் நாப்பழக்கப் பயிற்சிகளை வழங்கினார்.இப்பயிற்சியில் தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழ் மொழியின் தோற்றம், தமிழ் மொழியின் தொன்மை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். தமிழ் மொழியை உச்சரிப்பது குறித்து பாடல்கள் பாடி நடனமாடி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இக்கோடைகால முகாமில் கவிதை போட்டி, ஓவியப்போட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் நூல் பரிசளிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆத்திச்சூடி நூல் பரிசளிக்கப்பட்டது. 42 மாணவர்கள் நூலக உறுப்பினராக சேர்ந்து கொண்டனர். முடிவில் தன்னார்வலர் பவித்ரா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் மோகன சுந்தரம் செய்திருந்தார்.