மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்-தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் எம்.பி. உடையப்பன், மாவட்ட தலைவர் கே.கே. பாலசுப்பிரமணியன், ஆகியோர் தலைமையில் மாநிலச் செயலாளர் ராஜலிங்கம், மாவட்ட செயலாளர் விஸ்வம், நிர்வாகிகள் செல்வரங்கன், கருமலை கதிரேசன், பரத்ராஜா, வக்கீல் ராஜா, விஜய் கண்ணன், பார்த்திபன், லோகநாதன், உள்ளிட்டோர் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-
தமிழக மின்வாரியம் சமீபத்தில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை அறிவித்து உள்ளது. கடந்த காலங்களில் கொரோனா தாக்கத்தில் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.