சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து


சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி மாணவ-மாணவிகள் அசத்தினர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் உள்ள பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி மாணவ-மாணவிகள் அசத்தினர்.

மாற்றுத்திறனாளிகள் தினம்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவது அவசியம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு கல்வித்துறை ஏற்பாடு செய்து இருந்தது.

அதன்படி உறுதிமொழி எடுத்தல், விழிப்புணர்வு பேரணி, இணைவோம் மகிழ்வோம் என்ற தலைப்பில் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள், ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக காதுகேளாதோர் பயன்படுத்தும் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்முறையாக உருவாக்க கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி செய்தது.

சைகை மொழி

அதன்படி கோவை மாவட்டத்தில் காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறன் மாணவ-மாணவிகள் இணைந்து அசோகபுரம் அரசு பள்ளியில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டத்தின்போது சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன்படி நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் கைகளை அசைத்தவாறு சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்தினர். தொடர்ந்து மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த சிறார் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இதனை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.


Next Story