தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூரில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் தலித் மக்களுக்கு நடக்கும் சாதிய கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும், சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஊராட்சி தலித் கவுன்சிலர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், மதச்சார்பின்மைக்கு எதிராக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்தும் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இளம் புலிகள் மாவட்ட செயலாளர் அருண் அதிபன், ஊடகப்பிரிவு செயலாளர் சதீஷ் வள்ளுவன், தொகுதி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் பேரறிவாளன், மாநில முதன்மைச் செயலாளர் சித்தார்த்தன், தென் மண்டல ஊடகப்பிரிவு துணைத் தலைவர் தமிழன் தமிழரசு, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் குற்றாலகுமார், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் யாஸர்கான், திராவிட தமிழர் கழகம் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story