நாமக்கல்லில்தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில்தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
நாமக்கல்

பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும். மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று அம்மாநில பா.ஜனதா முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் சேகுவேரா தலைமை தாங்கினார். நகர செயலாளர் உமா மகேஸ்வரன் வரவேற்று பேசினார். மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன், கொள்கை பரப்பு செயலாளர் ஆதிவீரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மங்களமேடு கிராமத்தில் அருந்ததிய மக்களை தாக்கிய 9 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story