தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பழனி பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இளம்புலிகள் அணி மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தர்மராஜ், மத்திய மண்டல செயலாளர் திருவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்தும், மணிப்பூர் மாநில பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story