தமிழக அரசு 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்


தமிழக அரசு 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Oct 2023 6:45 PM GMT (Updated: 21 Oct 2023 6:46 PM GMT)

தமிழக அரசு 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.

சிவகங்கை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தி.மு.க. அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் நிதி நிலையை காரணம் காட்டி எங்கள் கோரிக்கைகள் கிடப்பில் போடப்படுகிறது. ஊக்க ஊதியம், சரண் விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பலன்களை கடந்த சில ஆண்டுகளாகவே எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. விலைவாசி புள்ளி உயர்வுக்கு ஏற்றால்போல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கிறதோ, அதையொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி அகவிலைப்படி காலம் தாழ்த்தி வழங்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் அதே தேதியில் தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கடந்த மே 2023-ல் வெளியான அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதல்-அமைச்சர் அளித்த உறுதியின் அடிப்படையில் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story