ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்!


ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்!
x
தினத்தந்தி 29 Oct 2022 8:51 AM IST (Updated: 29 Oct 2022 8:55 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா தமிழக சட்டசபையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்து தமிழக சட்டசபையில் கடந்த வாரம் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

இதனை தொடர்ந்து, அரசிதழில் இது வெளியிடப்பட்டு விரைவில் சட்டமாக அமலுக்கு வரும். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மூலம், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

1 More update

Next Story