தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சீர்காழியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நடந்தது
மயிலாடுதுறை
சீர்காழி:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் சிங்காரவேல், நிர்வாகிகள் சேட்டு, மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாதரக்குடி கணேசன் வரவேற்றார்.. ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பாபு, வேல்முருகன், உள்பட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story