தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு


தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு
x

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு

தஞ்சாவூர்

கல்லணையில் நடந்து வரும் பணிகள் குறித்து தஞ்ைச மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கல்லணை

காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பகிர்ந்து வழங்கப்படும். காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.

தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103.68 அடியாக உள்ளது. கல்லணையில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டால் கல்லணையில் இருந்து ஜூன் 16-ந்் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

கலெக்டர் ஆய்வு

கல்லணையில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொள்ளிடத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஷட்டர்களுக்கான மின்மோட்டார்கள், கொள்ளிடம் மணல் போக்கிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் தரைத்தள பணிகள் மற்றும் தடுப்பு சுவர் ஆகிய பணிகளையும், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர்கள் இளங்கோவன், மதன சுதாகரன், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், கல்லணை உதவி பொறியாளர் திருமாறன், பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன் மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story