டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பறிமுதல்
நெல்லையில் பாதுகாப்பற்ற முறையில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாநகரப் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் டேங்கர் லாரிகளில் டீசல் ஏற்றிச் செல்வதாக மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அதன் பேரில் தச்சநல்லூர் பகுதியில் ரோந்து சென்ற போலீசார் நேற்று முன்தினம் அந்த வழியாக டீசல் ஏற்றிச் சென்ற லாரிகளை கண்காணித்தனர்.
அப்போது தாழையூத்தில் உள்ள ஒரு குவாரிக்கு பாதுகாப்பற்ற முறையில் டேங்கர் பொருத்தி டீசல் ஏற்றிச் சென்ற மினி லாரியை போலீசார் மடக்கினார்கள். 900 லிட்டர் டீசலை பாதுகாப்பற்ற முறையில் கொண்டு சென்றதாக கூறி அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் பாலமுருகன், குவாரி உரிமையாளர் செல்வம், லாரி டிரைவர் சுடலை ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story