காப்புக்காட்டில் தார் சாலை அமைப்பு
மையனூர்-தொண்டனந்தல் இடையே காப்புக்காட்டில் தார் சாலை அமைப்பு
ரிஷிவந்தியம்
பகண்டை கூட்டு ரோட்டில் இருந்து கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாக கள்ளக்குறிச்சி வரை செல்லும் சாலையில் மையனூர்-தொண்டனந்தல் கிராமங்களுக்கு இடையே மேலப்பழங்கூர் காப்புக்காடு உள்ளது. கடந்த ஆண்டு காப்பு காட்டில் செல்லும் சாலையை சீரமைக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுமார் 1.8 கிலோ மீட்டர் தூர சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் கடும் அவதி அடைந்து வந்த வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் குறிப்பிட்ட பகுதியை நேரடியாக ஆய்வு செய்து சாலை அமைக்க அனுமதி வழங்கினர். இதையடுத்து தற்போது மையனூர்-தொண்டனந்தல் கிராமங்களுக்கு இடையே உள்ள மேலப்பழங்கூர் காப்புக்காட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலையில் வளைவுகள், மேடு, பள்ளங்கள் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அதை சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.