முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையையொட்டி கோவிலில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
காவேரிப்பட்டணம்
தை அமாவாசையையொட்டி கோவிலில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தை அமாவாசை
ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பதும், முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி பொதுமக்கள் நீர்நிலைகள், கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று தை அமாவாசையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
சிவன் கோவில்
காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெண்ணேஸ்வர மடம் சிவன் கோவிலில் தை அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதையொட்டி தங்களின் முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து வாழை இலையில் பச்சரிசி, காய்கறி, அகத்திக்கீரை, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அனுமந்தீஸ்வரர் கோவிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அனுமந்தீஸ்வரர் கோவிலில் சாமியை தரிசனம் செய்தனர்.