மகாளய அமாவாசையையொட்டிமேட்டூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்


மகாளய அமாவாசையையொட்டிமேட்டூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
x

மகாளய அமாவாசையையொட்டி, மேட்டூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

சேலம்

மேட்டூ

மகாளய அமாவாசையையொட்டி, மேட்டூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மகாளய அமாவாசை

தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

இந்த அமாவாசை அன்று, மறைந்த முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

மேட்டூர்

இதேபோல் நேற்று மகாளய அமாவாசைையயொட்டி, மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் காலையிலேயே குவிந்தனர். காவிரி ஆற்றின் கரையில் அவர்கள், தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். சிவாச்சாரியார்கள் பக்தர்களை வரிசையாக அமரவைத்து இந்த தர்ப்பண வழிபாட்டை நடத்தினர்.

அதாவது வாழை இலை வைத்து அதில் அரிசி மாவு பிண்டம் செய்து காய்கறிகள், பூ, தேங்காய், பழம், தர்ப்பை புல் ஆகியவற்றை வைத்து மறைந்த தம் முன்னோர்களுக்கு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பின்னர் அரிசி மாவு பிண்டத்தை காவிரி ஆற்றுக்குள் எடுத்து சென்று கரைத்து முன்னோர்களை வழிபாடு செய்தார்கள்.

காய்கறி, பழங்கள் விற்பனை

பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் தரிசனம் செய்தனர். இதையொட்டி நேற்று மேட்டூர் காவிரி ஆற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடைகளில் காய்கறி, பழங்கள், பூ விற்பனை சூடுபிடித்தது.

இதேபோல், சேலம் மாவட்டத்தில் கல்வடங்கம், பூலாம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


Next Story