நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

மார்கழி அமாவாசையையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை:

மார்கழி மாத அமாவாசையையொட்டி, நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகிலும், குறுக்குத்துறை இசக்கியம்மன் கோவில் அருகிலும், வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் அருகிலும் நேற்று ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார்கள்.

நெல்லை அருகன்குளம் அருகே உள்ள ஜடாயு தீர்த்தத்தின் அருகில் உள்ள ஜடாயுத்துறையிலும் பெரும்பாலானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தனர். மார்கழி அமாவாசையையொட்டி நெல்லை சந்திப்பு சாலைகுமார சுவாமி கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story