திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
காரியாபட்டி,
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசை
திருச்சுழியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு குண்டாற்று பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக எண்ணற்ற பேர் அதிகாலை முதல் திரண்டனர்.
முன்பு வற்றாத ஆறாக குண்டாறு இருந்ததால் திருச்சுழியை சுற்றியுள்ள அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, நரிக்குடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ராமேசுவரத்திற்கு செல்லாமல் இங்கு புனித நீராடி முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர். இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளாக மழை பொய்த்ததால் குண்டாற்றில் நீர் வரத்து முற்றிலும் இல்லை.
தர்ப்பணம்
குண்டாற்றில் தற்போது தண்ணீர் இல்லாததால் போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து தொட்டியில் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தண்ணீரில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து முன்னோரை வழிபட்டு சென்றனர்.
இதையடுத்து துணைமாலையம்மன், திருமேனிநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ஆடி அமாவாைசயை முன்னிட்டு திருமேனிநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குகனேஸ்வரன் செய்திருந்தார்.