டாஸ்மாக் பார் உரிமையாளர் மீது தாக்குதல்


டாஸ்மாக் பார் உரிமையாளர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் பார் உரிமையாளர் மீது தாக்குதல்

கோயம்புத்தூர்

பீளமேடு

கோவை விளாங்குறிச்சி அருகே ரத்தினகிரி ரோட்டை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 40). இவர் விளாங்குறிச்சி ரோட்டில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் இளங்கோவன் டாஸ்மாக் பாரில் இருந்தார். அப்போது, பார் அருகே சிலர் குடிபோதையில் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனை பார்த்த இளங்கோவன் அங்கு சென்று அவர்களை கண்டித்து அங்கிருந்து செல்லும்படி கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் பாரை பூட்டி விட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் விளாங்குறிச்சி ரோட்டில் சென்ற போது, பார் அருகே தகராறு செய்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் இளங்கோவனை தகாத வார்த்தைகளால் பேசி கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த இளங்கோவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் பார் உரிமையாளரை தாக்கிய சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்த வீரபாண்டி (22), விநாயகபுரம் கம்பன் தெருவை சேர்ந்த தீபக் (21), பீளமேடு காந்திமாநகரை சேர்ந்த ஹரிஹரன் (21), கணபதிமாநகரை சேர்ந்த வைசால் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story