டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம்


டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் பணியாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கண்ணன் (தென்காசி), அந்தோணி ராஜ் (தூத்துக்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட செயலாளர் சண்முகவேல் வரவேற்றார். மாநில செயல் தலைவர் பழனி பாரதி, மாநில பொதுச் செயலாளர் கோதண்டம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட துணைத் தலைவர்கள் மரகதலிங்கம், சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமிழகம் முழுவதும் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டி அனைத்து கடைகளுக்கும் கேமரா மற்றும் ராணுவத்தில் ஓய்வு பெற்றவர்கள் காவல் பணிக்கு அமர்த்த வேண்டும், வன்னிக்கோனேந்தலில் தாக்கப்பட்ட பணியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தூர்பாண்டியன் நன்றி கூறினார்.

1 More update

Next Story