ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்த டாஸ்மாக் நிர்வாகம்
ஆய்வின்போது கடைகளில் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஆய்வின்போது கடைகளில் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாளர்களுக்கு பதிலாக வெளிநபர்கள் பணியாற்றுவதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், பணியிலிருக்கும்போது டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கோ அல்லது வங்கி பணிகளுக்கோ செல்லும் போது உரிய அனுமதி பெற்று பணியாளர்கள் செல்ல வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story