டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம்


டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 24 Aug 2023 1:15 AM IST (Updated: 24 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதன்பேரில் மதுபானங்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இதனிடையே ஆத்தூர் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களிடம் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, விற்பனையாளர் முத்துசாமி (வயது 45) என்பவர் மதுபானங்களுக்கு கூடுலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட மேலாளர் குப்புசாமி நேற்று உத்தரவிட்டார். மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக மதுபானங்களுக்கு பணம் வசூலிக்க கூடாது என்றும், அவ்வாறு மதுபிரியர்களிடம் கூடுதலாக பணம் வசூலிப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.


Next Story