டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்களால் பரபரப்பு


டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்களால் பரபரப்பு
x

டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

கல்லக்குடி:

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று மதியம் திறக்கப்பட்டது. இதையடுத்து மது வாங்க அங்கு மதுப்பிரியர்கள் குவிந்தனர். இதனால் மதியம் 12 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கூட்டம் அலைமோதியது. இதையடுத்து தள்ளுமுள்ளு ஏற்படும் நிலையால், பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி டாஸ்மாக் கடை ஊழியர்கள், கல்லக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் அந்த டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று, கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஒருவர் பின் ஒருவராக வரிசையில் வந்து மதுபானங்களை வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து மதுப்பிரியர்கள் வரிசையில் வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

இந்த டாஸ்மாக் கடை நேற்று முன்தினம் திறக்கப்படாததாலும், சுமார் 7 கிராமங்கள் உள்ள பகுதியில் ஒரே ஒரு டாஸ்மாக் கடை என்பதாலும், இங்கு மது வாங்க நேற்று மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியதாக கூறப்படுகிறது.


Next Story