இமானுவேல் சேகரன் நினைவு தினம்: மதுரையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மதுரை,
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இதனிடையே, இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க மதுரை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story