சென்னையில் 5-ம் தேதி 'டாஸ்மாக்' கடைகள் மூடல்...!
சென்னையில் 5-ம் தேதி 'டாஸ்மாக்' கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்து விதமான 'பார்'களும் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire