மிலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது கலெக்டர் அறிவிப்பு
மிலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காதுஎன கலெக்டர் அறிவித்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை(வியாழக்கிழமை) நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாது நபி மற்றும் வருகிற 2-ந்தேதி(திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தியையொட்டி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். அதன்படி, மிலாது நபி மற்றும் காந்தி ஜெயந்தி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் இயங்காது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story