டாஸ்மாக் பார் உரிமையாளர் மீது வழக்கு
டாஸ்மாக் பார் உரிமையாளர் மீது வழக்கு செய்யப்பட்டது.
திருநெல்வேலி
திசையன்விளை:
சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது ஷபிர் ஆலம், திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் ஆயூப்கான் ஆகியோர் திசையன்விளை-உவரி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 15 வயது சிறுவனை வேலைக்கு வைத்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியாராஜ்குமார், பார் உரிமையாளர் கரூர் மாவட்டம் மூக்கனாங்குறிச்சி அம்மையப்பகவுண்டர் புதூரை சேர்ந்த பழனிசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும் சிறுவன் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story