டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 3:00 AM IST (Updated: 21 Jun 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை சிவானந்தகாலனியில் சி.ஐ.டி.யு. டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கோவை சிவானந்தகாலனி பகுதியில் சி.ஐ.டி.யு. டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் மண்டல அளவிலான கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார்.

நீலகிரி மாவட்ட செயலாளர் மகேஷ், திருப்பூர் மாவட்ட செயலாளர் அன்பு, கரூர் மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை மாவட்ட சி.ஐ.டி.யு பொருளாளர் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசும்போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிவரன்முறை, காலமுறை ஊதியம், இ.எஸ்.ஐ. வசதிகள், பணியிட பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

காலிபாட்டில்களை திரும்ப பெறும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும்.

பணிச்சுமையை கருத்தில் கொண்டு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்றனர். முடிவில் டாஸ்மாக் மாநில சம்மேளன துணை பொதுச்செயலாளர் ஜான்அந்தோணி நன்றி கூறினார்.


Next Story