6 வீடுகளில் ரூ.4 லட்சம் வரி பாக்கி; மாநகராட்சி எச்சரிக்கை


6 வீடுகளில் ரூ.4 லட்சம் வரி பாக்கி; மாநகராட்சி எச்சரிக்கை
x

பாளையங்கோட்டையில் ரூ.4 லட்சம் வரி பாக்கி வைத்துள்ள 6 வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி, மாநகராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாளையங்கோட்டை 36-வது வார்டில் வடக்கு ஐகிரண்டு ரோட்டில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள 6 வீடுகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் என பல ஆண்டுகளாக ரூ.4 லட்சத்துக்கும் மேல் வரி செலுத்தாமல் உள்ளது.

இதையொட்டி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து மேற்பார்வையில் மண்டல உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன் தலைமையில் வருவாய் உதவியாளர்கள் நேற்று சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்றனர். அங்கு ஜப்தி நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை எடுக்கும் வகையில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினார்கள். 15 நாட்களுக்குள் மாநகராட்சிக்கு வரி செலுத்தாவிட்டால், முதல் நடவடிக்கையாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story