பள்ளி ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும்


பள்ளி ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும்
x

ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேரை பள்ளி ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேரை பள்ளி ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்ட அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக காளிராசா, செயலாளராக ஜெயப்பிரகாசம், பொருளாளராக ராமகிருஷ்ணன், கவுரவ தலைவராக கார்த்திகேயன், மாவட்ட மகளிரணி தலைவியாக சுப்புலட்சுமி, மாவட்ட துணை தலைவராக பூங்கொடி, துணை செயலாளராக ஜோதிமணி, மாவட்ட செய்தி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக அருண்குமார், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக அலீம், மும்தாஜ் பேகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், கூட்டத்தில், வருகின்ற 10-ந்் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஜாக்டோ- ஜியோ வாழ்வுரிமை மாநாட்டில் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரளாக பங்கு பெறுவது.

ஆசிரியர்களாக...

ஆண்டுதோறும் ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேரை பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்யும் வழக்கத்தை இவ்வாண்டும் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வில் பள்ளிக்கு செல்லும்போது அவர்களது பணிப்பதிவேடு கணினிமயம் செய்யப்படாததால் மாத ஊதியம் பெறுவதில் பெரும் காலதாமதமாகிறது.

ஆகவே அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்களின் பணிப்பதிவேட்டினை கணினிமயம் செய்திட மாநில திட்ட இயக்குனருக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story