கிணற்றில் பிணமாக மிதந்த ஓவிய ஆசிரியர்போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சிபுதூரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 50). செவந்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொகுப்பூதியத்தில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெற்றோரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் விரக்தியுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சசிக்குமார் நாமக்கல் ஆண்டவர் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பிணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அவரது சகோதரர் ராஜா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமார் கால் தவறி கிணற்றில் விழுந்தாரா? இல்லை எனில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.