ஆசிரியர், பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர், பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அருகே ஜங்களாபுரம் கூட்ரோட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர், பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. மகரிஷி வித்யா மந்திர் பள்ளி குழுமத்தின் முதன்மை தலைமை அலுவலக அதிகாரி பிரேமலதா பூபதி, கல்வி ஒருங்கிணைப்பாளர் பிரீத்தி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வியோடு சேர்ந்த முழு பரிணாம வளர்ச்சி பற்றியும், மாணவர்களையும், பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஆலோசனைகளை வழங்கி, மீள்திறன் குறைந்த மாணவர்களை, மீள்திறன் மிக்க மாணவர்களாக எப்படி மாற்றுவது என்பதைப் பற்றிய வழிமுறைகளை நகைச்சுவையின் வாயிலாக எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினர். தாளாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் செண்பகாதேவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story