ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழி தேர்வு- 3 மையங்களில் இன்று நடக்கிறது


ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழி தேர்வு- 3 மையங்களில் இன்று நடக்கிறது
x

ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழி தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழி தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ரோவர் பொறியியல் கல்லூரி ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. இன்று நடைபெறவுள்ள தேர்வினை மொத்தம் 280 பேர் எழுதவுள்ளனர்.மொத்தம் 150 மதிப்பெண்களுக்கான தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடக்கிறது. தேர்வாளர்கள் காலை 7.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும். அனுமதி அட்டை இருந்தால் தான் தேர்வாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.


Next Story