சோகத்தில் ஆசிரியர் தற்கொலை
விபத்தில் மகன் பலியான சோகத்தில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்
சிவகாசி
திருத்தங்கல் வள்ளலார் நகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 74). இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கோபம்மாள் என்ற மனைவியும், பொன்செல்வி என்ற மகளும், பூபதிகிருஷ்ணன், பால குமார் என்ற 2 மகன்களும் இருந்தனர். சுப்பையா, அவரது மனைவி கோபம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இதில் 2-வது மகன் பாலகுமார் வாகன விபத்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் சுப்பையா மிகுந்த மனவருத்தத்தில் காணப்பட்டார். இதற்கிடையில் சம்பவத்தன்று வீட்டில் தனது மனைவி கோபம்மாள் தூங்கிய பின்னர் விஷத்தை குடித்துள்ளார். இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த மகள் பொன்செல்வி மற்றும் உறவினர்கள் சுப்பையாவை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சுப்பையாவின் மகன் பூபதி கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசாவிபத்தில் மகன் பலியான
சோகத்தில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்ர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.