விபத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவி சாவு: வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில் எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

விபத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவி சாவு: வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில் எழும்பூர் கோர்ட்டு உத்தரவு.
சென்னை,
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 18). இவர், சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு இவர் தனது தோழிகளுடன் பள்ளி நுழைவுவாயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், ரஞ்சிதா மற்றும் அவரது தோழிகள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த ரஞ்சிதா உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கொருக்குப்பேட்டை வினோபாநகரைச் சேர்ந்த வெங்கடேசன் (19) என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, வெங்கடேசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
Related Tags :
Next Story






