நீட் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எழுத வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் அறிவுரை
நீட் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எழுத வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
நீட் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எழுத வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் க.அருள்சங்கு, பொதுச் செயலாளர் வெ. சரவணன், பொருளாளர் த.ராமஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிளஸ் -2 முடித்து உயர் படிப்பில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நீட் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 14 ஆயிரம் பேர் இந்ததேர்வு எழுத உள்ளனர். ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ- மாணவிகளும் நீட் தேர்வு எழுதும் மையத்திற்கு அரை மணி நேரம் முன்னதாக சென்று அச்சமின்றி, பதட்டமின்றி சிறப்பான முறையில் தேர்வு எழுத வேண்டும். தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.