பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை - பள்ளிக்கல்வித்துறை


பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை  -  பள்ளிக்கல்வித்துறை
x

காலதாமதமாக வருவது, பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்போது பணியில் ஈடுபடுவோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில் ,

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலதாமதமாக வருவது, பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.


Next Story